Homeஉலகம்பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: பொறுப்புகூறலை வலியுறுத்துகிறது ஈரான்!

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: பொறுப்புகூறலை வலியுறுத்துகிறது ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது.

எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும்  அறைகூவல் விடுத்துள்ளார்.

மேற்படி தாக்குதல் குறித்து அமெரிக்கா இன்னும் முறையானப் பொறுப்பை ஏற்கவில்லை என்றாலும், இது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular