Homeஉள்நாடுமொட்டு கட்சி காலியில் வலுவாகவே உள்ளது: ரமேஷ் பத்திரன!

மொட்டு கட்சி காலியில் வலுவாகவே உள்ளது: ரமேஷ் பத்திரன!

“தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.” – என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை.

சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன கூறியவை வருமாறு,

“ மீண்டும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக வாங்கு வங்கி உள்ள மாவட்டம்தான் காலி மாவட்டம். அங்கு சிறப்பான முறையில் பயணம் தொடரும்.

இந்த ஆட்சியின்கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிவருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாக செயல்பட வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular