Homeஉள்நாடுஐ.தே.க. ஆண்டு விழாவுக்கு மலையக தலைவர்களுக்கும் அழைப்பு: சஜித் பங்கேற்கமாட்டார்!

ஐ.தே.க. ஆண்டு விழாவுக்கு மலையக தலைவர்களுக்கும் அழைப்பு: சஜித் பங்கேற்கமாட்டார்!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கமாட்டார்.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் என தெரியவருகின்றது.

கட்சியின் வாழ்த்து செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார செல்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

இவ்விழாவில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular