அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள பொல்துவ சந்தியில் ஆரம்பமாகியுள்ளது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
