HomeTop newsநள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலைகள்

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலைகள்

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலைகள் அறிவிக்கப்படவுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இம்முறை இலங்கையிலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒவ்வொரு மாதமும் இறுதி நாளில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்து வருகிறது.

இதற்கமைய, லங்கா ஐஓசி (LIOC) மற்றும் சினோபெக் உள்ளிட்ட ஏனைய எரிபொருள் நிறுவனங்களும் தமது விலைகளைத் திருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular