HomeTop newsபாதாள உலகக் குற்றத் தடுப்புச் சட்டம் - வதந்திகளை மறுத்தார் நீதியமைச்சர்

பாதாள உலகக் குற்றத் தடுப்புச் சட்டம் – வதந்திகளை மறுத்தார் நீதியமைச்சர்

பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மறுத்துள்ளார்.

நீண்ட தலைமுடி வைத்திருப்பவர்கள் அல்லது உடலில் பச்சைக்குத்தியவர்கள் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் சொத்துச் சேதங்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆடை அணிதல், தலைமுடி அலங்காரம் மற்றும் பச்சைக்குத்துதல் போன்ற தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு இச்சட்டம் தடையாக இருக்காது எனத் தெரிவித்த அமைச்சர், பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular