HomeTop newsஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர்.

அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கமைய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த நீதிமன்ற உத்தரவு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுக்குப் படித்துக் காண்பிக்கப்பட்டுக் கையளிக்கவும் பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணி பேரணியில் இணைந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் நேற்று முதல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதியில் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular