நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு பல மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த முற்கூட்டிய எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (11) மாலை 4:00 மணி முதல் நாளை (12) மாலை 4:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம்: எல்ல மற்றும் பசறை,
களுத்துறை மாவட்டம்: வலல்லவிட மற்றும் புலத்சிங்கள.
கண்டி மாவட்டம்: தும்பனை, யட்டிநுவர, ஹதரலியத்தை மற்றும் தொலுவ.
கேகாலை மாவட்டம்: அராநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை மற்றும் வரக்காபொல.
குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் அலவ்வ,
மாத்தளை மாவட்டம்: மாத்தளை, ரத்தொட்ட மற்றும் அம்பங்கங்கை கோறளை.
நுவரெலியா மாவட்டம்: ஹங்குராங்கெத்த.
இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, நிவித்திகலை, அயகம, குருவிட்டை, வெளிபொல, எஹலியகொட, கலவானை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
