பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அரசியலில் இருந்து முழுமையாக விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த திடீர் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னரும், அடுத்த பொதுத் தேர்தல் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரவுள்ளதாக ஸ்டார்மர் முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகும் முடிவை அவர் எடுத்துள்ளமை பிரிட்டன் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
