HomeTop newsசெப்டம்பர் 5 முதல் நாடு தழுவிய பிரம்மாண்ட மக்கள் பேரணி

செப்டம்பர் 5 முதல் நாடு தழுவிய பிரம்மாண்ட மக்கள் பேரணி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

“ஜி.எல். பீரிஸின் வீட்டில் இரவோடு இரவாகச் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்காமல் வீதியில் இறங்கிச் செய்யச் ​சொல்லுங்கள். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் கூட்டங்களை நடத்துமாறு கூறுங்கள். அதை விடுத்து கோட்டாபயவை விட ஒன்று இருக்கிறது, ரணில் விக்கிரமசிங்கவை விட ஒன்று இருக்கிறது, அங்கு ஒன்று இருக்கிறது, இங்கு ஒன்று இருக்கிறது என்று பேசுவதில் பயனில்லை. வார்த்தைகளில் பயனில்லை.

நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைத்து வருகிறோம்.

வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்டங்களில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுமானால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கூறுகிறோம். அவ்வளவுதான் செய்ய வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் செயல்படுத்திய வேலைத்திட்டங்களைச் சற்றேனும் பார்க்குமாறு சொல்லுங்கள்.”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular