பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுடன் தொடர்புடைய 54ஆம் உறுப்புரையின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் கடந்த 7ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த நீதி அமைச்சு, தற்போது மூடப்பட்டுள்ள மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் புதிய சிறைச்சாலை இயங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
