சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது (T20) போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ததையடுத்து, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கை இன்னிங்ஸின் முதல் ஐந்து ஓவர்கள் நிறைவடைந்த நிலையில், ஒரு விக்கெட்டை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் கமில் மிஷார ஆகியோர் களத்தில் நிலைத்து நின்று துடுப்பாடி வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதனால் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.
போட்டியின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
