Homeசினிமாவிஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் இடையேயான விவாகரத்து வழக்கு நாளை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முதலமைச்சர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டி கடந்தாண்டு டிசம்பரில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் திகதி விசாரணைக்கு வந்தநிலையில், தேர்தல் பணிகள் காரணமாக விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular