Homeஉலகம்ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின.

பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

ஈரான் நாட்டை அமெரிக்காவும் தாக்கி வருகிறது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி ஏவப்பட்ட 4 ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.

இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு படை அதன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், இந்த பிராந்தியத்தில் கடல்சார் போக்குவரத்தில் உடனடி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த டிரோன்கள் இருந்தன என தெரிவித்து உள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அடங்கிய சரக்கு கப்பல்களின் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக உள்ள இந்த ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை முடக்கும் வகையில், ஈரான் செயல்படுகிறது.

அதனால், இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் முற்றுகையிட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular