48 நாடுகள் பங்கேற்கும் 23-வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11ம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்த போட்டியை மைதானத்திற்கு காண வரும் ரசிகர்கள் தண்ணீர் போத்தல்கள் எடுத்து செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
முன்பு ரசிகர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்களை எடுத்து வந்து மைதானத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் போத்தல்களை மைதானத்தில் தூக்கி எறிந்து வீரர்கள் காயமடைய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சர் வதேச கால்பந்து சம்மேளனம் விளக்கம் அளித்துள்ளது.
