Homeவிளையாட்டுஆர்சிபி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா

ஆர்சிபி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா

2026ம் ஆண்டுக்கான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் கிண்ணத்தினை வென்றதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த வெற்றிப் பேரணி இந்த ஆண்டு நடைபெறாது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் அபாயம் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெற்றி பேரணிக்கு பதிலாக, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கான சிறப்பு பாராட்டு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ரசிகர்கள் முன்னிலையில் கவுரவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் துயர சம்பவம் ஏற்பட்டிருந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பெரிய அளவிலான பேரணியை தவிர்க்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தனது இரண்டாவது பட்டத்தை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular