நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நோய்ப்பரவியல் பிரிவு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை செல்லும் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி வழங்கிய தகவலின்படி, நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்றினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று முதன்முதலில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் ரிக்கிளகஸ்கடா, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியதலாவ உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்ற நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
எனினும், நேற்று (31) வரையிலான நிலவரப்படி 59 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்:
காய்ச்சல்
கடுமையான தலைவலி
வாந்தி
உடல் சோர்வு
