இடைக்காலத் தடை உத்தரவால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இன்று (27) நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், பொது எதிர்க்கட்சியின் ஆதரவுடன் 2 மேலதிக வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் வின்சன் பிரான்சிஸ் தவிசாளராக தெரிவானார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரதிநிதிக்கு 8 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதேவேளை, உப தவிசாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் 11 மேலதிக வாக்குகளைப் பெற்று, பொது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் துசித லக்மால் உப தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்.
