HomeTop newsஇலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க மோடியிடம் விஜய் கோரிக்கை

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க மோடியிடம் விஜய் கோரிக்கை

இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற நேரடி சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவில் அதிகரித்து வருவதாக விஜய் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போது 58 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 266 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular