Homeஉலகம்துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் திட்டவட்டம்!

துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் திட்டவட்டம்!

அமைதி பேச்சு தொடர வேண்டுமானால் ஈரான் மீதான துறைமுக முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என ஜெனிவாவுக்கான ஈரான் தூதுவர் Ali Bahreini வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய தடையானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகின்றது.

எனவே, அமெரிக்கா ஈரானின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்கும் எதார்த்தமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி பேச்சானது சுயநலனுக்காக முன்னெடுக்கப்படுவதாக அமையக்கூடாது எனவும் ஈரான் தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.

ஈரான் அரசாங்கத்துக்குள் பிளவு இருப்பதாக ட்ரம்ப் வெளியிட்ட கருத்தை நிராகரித்த அவர், அமெரிக்க அரசிடமே முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் மலிந்து கிடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular