Homeஉள்நாடு"உலக அமைதிக்கான நடை பயணம்" 3 ஆம் நாள் நிகழ்வு இன்று

“உலக அமைதிக்கான நடை பயணம்” 3 ஆம் நாள் நிகழ்வு இன்று

உலக அமைதியை வலியுறுத்தி “அமைதிக்கான நடைபயணம்” எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தின் மூன்றாம் நாள் பயணம், மாவனல்லை – பெலிகம்மன வித்தியாவர்த்தன பிரிவேனா போத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular