Homeசெய்திபுசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர்களுக்கான QR அடையாள அட்டை அறிமுகம்!

கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில், மாணவர்களுக்கான QR முறைமையிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நவீன முறையின் மூலம், மாணவர்களின் பாடசாலை வரவு தொடர்பான தகவல்களை, பெற்றோர்களுக்குத் துரிதமாகத் தெரியப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஊடாக மாணவர்களின் வருகையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களின் பாதுகாப்பையும் கல்வி நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த முடியும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பாடசாலையில் ஏற்கனவே வகுப்பறை பாடங்களைச் சமகாலத்தில் கண்காணிக்கும் ‘E-Recordbook’ முறைமை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் இந்த QR அடையாள அட்டை அறிமுகம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பதில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

தகவல்:
வீ.பிரபாகர்,
செயலாளர், பாடசாலை அபிவிருத்தி சங்கம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular