Homeஉலகம்இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரணதண்டனை!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரணதண்டனை!

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு ( இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானின் சிவில் பாதுகாப்புத் துறையில் உயர் பதவியில் இருந்த மெஹ்தி பரித் (Mehdi Farid) என்பவர், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தூக்கிலிடப்பட்டார்.

பாதுகாப்பு வசதிகளின் வரைபடங்கள், உள் கட்டமைப்பு விவரங்கள் மற்றும் பணியாளர் கோப்புகளை இஸ்ரேலுக்கு மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஈரான் நாட்டின் நீதித்துறை ஊடகமான மிசான் (Mizan), இந்தத் தண்டனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular