Homeஉலகம்ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான் அடிபணியாவிட்டால், அந்நாட்டின் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்போம் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்திற்கு ஈரான் பாதிப்பை ஏற்படுத்த முயல்வதாகவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இன்று இரவு எட்டு மணிக்குள் ஈரானிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கார்க் தீவில் இராணுவ இலக்குகளை மட்டுமே அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும், பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகவில்லை.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular