Homeஉள்நாடுமலையக தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து: அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!

மலையக தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து: அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறுகோரி மலையக சிவில் அமைப்பு பிரதிநிதிகளால் ICCPR சட்டம் (2007, இல. 56) கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேச வாதத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் விதத்திலும், வெறுப்புப் பேச்சாகவும் அமைந்துள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜீவரத்தினம் சுரேஷ் (iPEN அமைப்பு ), அந்தனி ஜெசுதாசன் (VOPP அமைப்பு), செல்வராஜா ராஜசேகர் (மாற்றம்அமைப்பு ),
அழகர் செல்வராஜா (சுய சக்தி நிறுவனம்), மற்றும் கே. யோகா சுஜி போன்ற சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

செய்தி .K.சுரேஸ்குமார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular