Homeஉலகம்போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்

போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்

இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். ஈரானின் பாதுகாப்புப் படை தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தனா்.

இதனைத் தொடா்ந்து, ஈரானும் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் ராணுவ நிலைகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய உலக நாடுகள் அதிகம் பயன்படுத்தப்படும் ஹோா்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும், தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். ஆனால் இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அரகாச்சி தனது சமூகவலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘போரை நிறுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு எங்கள் நாடு கோரிக்கை விடுத்ததாக கூறுவது மாயை (பொய்). எங்கள் நாடு ஒப்பந்தத்துக்கோ அல்லது பேச்சுவாா்த்தைக்கோ கோரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்கா்கள், ஈரானியா்கள் மீது தாம் திணித்துள்ள போா் தவறானது, அதை திரும்பச் செய்யக் கூடாது என்று அமெரிக்க அதிபா் உணரும் வரை எங்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular