Homeஉள்நாடு"தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பளமும் பட்டியலில்"

“தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பளமும் பட்டியலில்”

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுதல்களில் ஒன்றாகத் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரமும் பட்டியலிடப்பட்டுள்ளது

தேசிய ரீதியாக சம்பளக் கட்டமைப்பானது சட்டத் திருத்தங்கள் ஊடாக இடம்பெற்ற போதும், தோட்டத் தொழிலாளர்களுகளுக்கு நாட்கூலியானது அத்தகைய அடிப்படை கட்டமைப்பு சட்டத் திருத்தங்களுக்கூடாக மேற்கொள்ளப்படாத போதும் நாட்கூலியானது அதிகரிக்கப்பட்டுள்ளது என பவ்ரல் மற்றும் மார்ச் 12 இயக்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தலை கண்காணிப்பு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மார்ச் 12 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டப வ்பளாகத்தில் இடம்பெற்ற மார்ச் 12 இயக்கத்தின் பதினோராவது ஆண்டு நிறைவு விழாவில் மேற்படி அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது .

தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தலை கண்காணிப்பு செயல்முறையின் பிரதம ஆலோசகராக பணியாற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தனது அறிக்கையிடலின்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் சம்பள கட்டமைப்பை மாற்றி அமைப்பதன் மூலம் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

அத்தகைய கட்டமைப்பு மாற்றத்தை 2025 ஆம் ஆண்டு சட்டத்திருத்தங்கள் ஊடாக முன்னெடுத்ததன் அடிப்படையில் நாட்டில் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத் தொகை அதிகரிக்கப்பட்டுளளது.

மேலும் குறைந்த பட்ச கூலிச்சட்டமும் திருத்தப்ட்டு 380/ இல் இருந்து 1200/- வரை உயர்த்தப்பட்டுள்ளது.ஆனாலும் இந்தச் சட்டத் திருத்தங்கள் எதிலுமே உஉள்வாங்கப்படாத நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நாடகூலி 2026 ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முறைமை சிக்கலானதும் விமர்சனத்துக்குமுரியதாகும் என்ற போதிலும் அரசாங்கம் தொகை அடிப்படையில் நாட்கூலி உயர்வை வழங்கி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் கைத்தொழில் துறை பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற அரச பொது நிதி குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கருத்து வழங்குனர்களாக பிரசன்னமாகி இருந்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தோட்டத் தேழிலாளர்களின் நாட்கூலி உயர்வுக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அரச பெருந்தோட்டங்களுக்கு அல்லாது பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு திறைசேரி உதவுவதன் ஊடாக வழங்கப்பட்டுள்ள முறை சட்டரீதியான சவாலுக்கு உட்படக் கூடியது. எனவே இது குறித்து அரச பொது நிதிக் குழுவில் நாம் ஆராய்ந்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர், ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள், அமைச்சுச் செயலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நெறிப்படுத்தி இருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular