Homeஉள்நாடுபங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ICC T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி, தற்போது பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular