Homeஉலகம்கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கேரளா மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது.

கேரளா மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்​றப்​படும் என்று மாநில அரசு தீர்​மானம் நிறைவேற்​றியது.

அந்​தத் தீர்​மானத்​தில், அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 3-ன்​படி மாநிலத்​தின் பெயரை கேரளம் என்று மாற்​று​வதற்கு அனு​ம​திக்க வேண்​டும் என்று கோரி​யிருந்​தது.

இந்​நிலை​யில், பிரதமர் மோடி தலை​மை​யில் மத்திய அமைச்​சர​வைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் கேரளா மாநில பெயரை கேரளம் என்று மாற்​று​வதற்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து, கேரள சட்டமூலம் 2026-ஐ மாநில சட்​டப்​பேர​வைக்​குக் குடியரசுத் தலை​வர் பரிந்​துரைப்​பார்.

கேரளா மாநில சட்​டப்​பேர​வை​யின் கருத்​துகளைப் பெற்ற பிறகு மத்​திய அரசு அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கும்.

பெயர் மாற்​றம் தொடர்​பான மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்து நிறைவேற்​றும்.

இந்த நடை​முறை​கள் முழுமை பெற்​றவுடன், கேரளம் என்ற பெயர் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular