Homeஉள்நாடுசஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!

சஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூல் பதிவு வருமாறு,

” எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் உடன்பாட்டு கூட்டணி இருக்கிறது.

இரண்டுமே ஒரே கட்சி அல்ல. சஜித் எமது கட்சி தலைவரும் அல்ல. அவர் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற தேசிய கூட்டணி தலைவர்.

அவரை, “அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள்” என நாம் கட்டு படுத்த முடியாது. நாம் கட்டுபடுத்துவதும் இல்லை.

அவரும் எம்மை அதே மாதிரி கட்டு படுத்த முடியாது. அவர், எம்மை கட்டு படுத்துவதும் இல்லை.

பாராளுமன்ற வாக்களிப்பில் கூட நாம் சுயாதீனமாகவும், சேர்ந்தும் வாக்கு அளிக்கின்றோம்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

2004ம் வருடம், சந்திரிக்கா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அமைத்து, வெற்றிலை சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து, அனுரவின் JVP போட்டி இட்டது.

பிறகு, 2005ம் வருடம், அதே சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,

மஹிந்த ராஜபக்சவை வேட்பாளர் ஆக்கி, அவரை போட்டி இட செய்து, பெரும் பாடு பட்டு, வடக்கில் தேர்தல் பகிஷ்காரம் நடத்த பட்ட நிலையில், மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கியதும், அனுரவின் JVP தான்.

ஆகவே, JVP எப்படி, மஹிந்த தலைமையிலான கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் பட்டதோ, அதேபோல்தான், தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் தலைமையிலான கட்சியுடன், புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் படுகிறது.

இது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டம் காரணமான அரசியல் நடைமுறை ஆகும். தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு, மாற்று வழி கிடையாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular