சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய பொறிமுறை அவசியம் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


