Homeஉள்நாடுசிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு 91 வயதாகும்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஜயவர்த்தனபுர கோட்டை நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 2004ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்தார். இடதுசாரி அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட அவர், நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனக் கருதப்படுகிறார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும், பின்னர் சிரேஷ்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். அவரது காலத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டு முக்கிய பங்கு வகித்தார். இந்த குழுவின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அவரது மறைவு இலங்கை அரசியல் துறைக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular