Homeஉள்நாடுநானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்

நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பகுதியில் இருந்து கந்தபளை ஹெதர்செட் நோக்கி பயணித்து கொண்டிருந்த வண்டி திடீரென வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி  கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular