Homeஉள்நாடுவெனிசுலா விவகாரம் குறித்து அமைதியான தீர்வை வலிறுத்துகிறது இலங்கை!

வெனிசுலா விவகாரம் குறித்து அமைதியான தீர்வை வலிறுத்துகிறது இலங்கை!

வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, அனைத்துலக மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற, அனைத்துலக சட்டத்தின் கொள்கைகளையும், ஐ.நா. சாசனத்தையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும்,பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பேச்சுக்கள் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. பாதுகாப்பு சபை போன்ற அதன் அமைப்புகளும் இந்த விடயத்தை கையிலெடுத்து, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயற்படுவது முக்கியம்,” என்றும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular