Homeஉள்நாடுஇன்றும் மழை:சீரற்ற காலநிலையால் 700 வீடுகள் சேதம்!

இன்றும் மழை:சீரற்ற காலநிலையால் 700 வீடுகள் சேதம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இது இன்று மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக மேற்கு – வடமேற்குத் திசையை அண்மித்து நகர்ந்து செல்வதுடன் நாளையளவில் சூறாவளியாக மாற்றமடையும். நாளை மறுதினம் காலையளவில் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்திய மற்றும் தென்மேற்குத் திசையுடன் இணைந்த இடத்தில் மிகவும் பலமிக்க சூறாவளியாக வலுவடையும்.

இதன் பிற்பாடு வடக்கு – வடமேற்குத் திசையினுடாக நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு தாய்லாந்து நாட்டினால் முன் மொழியப்பட்ட “மொன்தா” எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 579 குடும்பங்களைச் சேர்ந்த 22, 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 697 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular