Homeஉள்நாடுசெம்மணியில்   கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செம்மணியில்   கொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம், செம்மணியில்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

செம்மணி சந்திப் பகுதியில் வடக்கு – கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு “வாசலிலே கிருஷாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது

இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular