Homeஉலகம்இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் உச்ச தலைவர் கர்ஜனை!

இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் உச்ச தலைவர் கர்ஜனை!

“போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கையில் வாளேந்திய நபர் கோட்டை வாயிலில் இருப்பதுபோன்ற சித்தரிப்புப் படத்தை இணைத்து, ‘போர் தொடங்கியது’ என்று குறித்த பதிவியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டையின் மேலே குண்டு மழை பொழிவதுபோலவும் காட்சி உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமியர்களுக்கும் – யூதர்களுக்கும் இடையேயான கைபர் போரை நினைவுகூர்வதுபோல் இந்த வரைபடம் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular