Homeஉலகம்தரமான சம்பவம்: இஸ்ரேலை போற்றுகிறார் ட்ரம்ப்!

தரமான சம்பவம்: இஸ்ரேலை போற்றுகிறார் ட்ரம்ப்!

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அற்புதமானது மற்றும் மிகவும் வெற்றிகரமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே எல்லாம் தெரியும் என்றும், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தாலும், இஸ்ரேலின் செயல்கள் நிலைத்தன்மையை சீர்குலைக்கவில்லை என்று கூறிய டிரம்ப் , என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ஈரானின் பதிலடித் தாக்குதலின்போது இஸ்ரேல் மீது பாயும் டிரோன்களை இடைமறிக்க அமெரிக்கப் படைகள் உதவியதாகவும் இரு மூத்த அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular