Homeஉலகம்இஸ்ரேல் வான் பாதுகாப்பைமீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்!

இஸ்ரேல் வான் பாதுகாப்பைமீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்!

இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் முன்னெடுத்துவருகின்றது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உட்பட முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது.
மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஈரான் ஏவுகணைகளால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதும், ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular