Homeசினிமாமீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது.

’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதனிடையே புதிய படமொன்றை அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. சசி இயக்கவுள்ள இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய் ஆண்டனி – சசி இருவரும் இணைந்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷானும் இணைந்து நடிக்கவுள்ளார். விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular