Homeசினிமா500 கோடி வசூலை கடந்த ‘துரந்தர்

500 கோடி வசூலை கடந்த ‘துரந்தர்

பொலிவூட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் வசூலில் முன்னிலையிலுள்ளது. குறித்த திரைப்படம் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே 500 கோடி இந்திய ரூபா வசூலை கடந்துள்ளது.

குறித்த வசூல் தொகையை கடந்த இரண்டாவது இந்திய திரைப்படம் துரந்தர் என்ற சாதனை பதிவாகியுள்ளது. இதுவரை குறித்த சாதனையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் பெற்றிருந்தது. அத்துடன் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் வசூல் சாதனையையும் துரந்தர் திரைப்படம் கடந்துள்ளதாக பொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட துரந்தர் திரைப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கியுள்ளதால் சில அரபு நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular