Homeஉள்நாடுஅரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்து!

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்து!

பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

‘ பயங்கரவாத தடைச்சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. 12 அல்லது 13 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள். இந்த சட்டத்தின் பிரகாரம் தவறாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. இதனை ஏற்க முடியாது.

எனவே, மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular