Homeஉலகம்வடகொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பு: உக்ரைனுக்கு எதிராக வாக்களிப்பு!

வடகொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பு: உக்ரைனுக்கு எதிராக வாக்களிப்பு!

உக்ரைனில் இருந்து தமது படைகளை ரஷ்யா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடா உட்பட 93 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், வடகொரியா உட்பட 18 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் 2014 முதல் போர் நடந்துவருகின்றது.

போரின் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான நேற்று, பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6 ஆம் திகதி நடத்த உள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.

பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 63 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular