Homeஉள்நாடுகுட்டி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கூட்டாக களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள்!

குட்டி தேர்தலில் வடக்கு,கிழக்கில் கூட்டாக களமிறங்கும் 9 தமிழ்க் கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்பது தமிழ்க் கட்சிகள் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலிலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் இக்கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளன.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசுக் கட்சி மற்றும் சமத்துவ கட்சி ஆகிய ஒன்பது கட்சிகளுமே இவ்வாறு கூட்டாக களமிறங்கவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular