Homeஉள்நாடுநல்லத்தண்ணியில் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நல்லத்தண்ணியில் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நல்லத்தண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்சன் தெரிவித்தார்.

நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில் 23 ஆம் திகதி மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவிய மிகவும் வெயில் வானிலை காரணமாக, வனப்பகுதி முழுவதும் வேகமாகப் பரவியது.

லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது.

இருப்பினும், நோர்வூட் பிரதேச செயலாளர் சமிரா கம்லத்தின் தலையீட்டால், இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரின் உதவியுடன் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, 11 முறை தண்ணீர் தெளித்த பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது மேற்படி வனப்பகுதி காப்பாளர் வி.ஜே. ருக்ஷன் மேலும் தெரிவித்தார்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடுமையான வெயில் வானிலை காரணமாக, வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், தனது அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொதுமக்களைத் தெரிவிக்குமாறு வி.ஜே. ருக்‌ஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular