Homeஉள்நாடுஇலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து
மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 இந்திய மீனவர்களும் மூன்று ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி 10 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular