Homeஉள்ளூர்மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் இறுதி முடிவு இன்று

மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் இறுதி முடிவு இன்று

மின்விநியோக துண்டிப்பு தொடர்பில்  இறுதி முடிவு இன்று வியாழக்கிழமை (13) அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை  தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை இன்று காலை 10.00 மணியளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை  தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.

மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை  10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டின்  அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் தடை விதிக்கப்பட்டது.

மின் விநியோகத்துடன் தொடர்புடைய பணிகளை விரைவாக முடித்த பின்னர், ஜெனரேட்டர்களை இயக்க உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாளை வெள்ளிக்கிழமை (14)  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்  தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular