Homeஉள்ளூர்நாட்டின் அனைத்து நகரங்களிலும் மிதமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் மிதமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்று வியாழக்கிழமை (13) நாள் முழுவதும் காற்றின் தர சுட்டெண் 52 தொடக்கம் 86க்கு இடையில் இருக்கும். இது நாட்டின் அனைத்து நகரங்களிலும் மிதமான அளவில் இருக்கும் என்பதை குறிக்கின்றது.

நேற்று புதன்கிழமை (12) நாட்டின் அனைத்து மிதமான நிலையில் காணப்பட்டுள்ளது.

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமானதாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular