Homeஅறிவியல்சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என அறிவித்து வந்தது.

இந்நிலையிலேயே விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கமைய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 12-ம் திகதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இதன்மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular