Homeஉள்ளூர்முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

முள்­ளி­வாய்க்கால்  நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முள்­ளி­வாய்க்கால் பிர­தேசம் இந்தக் காலப் பகு­தியில் இரத்­தத்­தினால் தோய்ந்­தி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

இறுதி யுத்­தத்தின் போது பேரி­ழப்­பு­களை தமிழ் மக்கள் சந்­தித்­தி­ருந்­தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை­யான ஒரு வார காலத்தில் முள்­ளி­வாய்க்­காலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர். தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த மக்கள் மீது பல­முனைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

இதனால் ஏற்­பட்ட இழப்­புகள் விப­ரிக்க முடி­யாத சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த இறுதி யுத்­தத்தின் போது 90 ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். 9   ஆயிரம் சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்­டனர். படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள், படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள், படை­யி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள் என்று காணா­மல்­போ­னோ­ரது சோக வர­லா­றுகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இவ்­வாறு முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­பட்ட இழப்­பு­களை நினை­வு­ கூர்ந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் வரு­டந்­தோறும் மே மாதம் 18ஆம் திகதி நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்­ளி­வாய்க்கால் வாரம் நினை­வு­ கூ­ரப்­ப­டு­கின்­றது.

16 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இம்­மு­றையும் முள்­ளி­வாய்க்கால் வாரம் கடந்த 6 தினங்­க­ளாக அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இன்று முள்­ளி­வாய்க்கால் நினைவு முற்­றத்­திலும் வடக்கு, கிழக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. முள்­ளி­வாய்க்­காலில் மக்­கள்­பட்ட அவ­லத்தை வெளிக்­காட்டும் வகையில் கடந்த ஒரு வார கால­மாக வடக்கு, கிழக்கில் முள்­ளி­வாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்­கப்­பட்டு வந்­தது.

முள்­ளி­வாய்க்­காலில் பேர­ழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி கோரி போராடி வரு­கின்­றனர். ஆனால், 16 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் அதற்­கான நீதி இன்­னமும் கிடைக்­க­வில்லை.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என்று மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் உறுதி வழங்­கிய போதும் உள்­ளக விசா­ர­ணையில் எது­வித முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular